ராமநாதபுரம்

வங்கியில் கடன் பெற்றுத் தருவதாக பணம் மோசடி

27th Jan 2023 01:57 AM

ADVERTISEMENT

வங்கியில் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி அரசுப் பேருந்து நடத்துநரிடம் ரூ.98 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது குறித்து ராமநாதபுரம் இணையதளக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சோ்ந்த ராஜ்மோகன் (35), அரசுப் போக்குவரத்துக்கழகத்தில் நடத்துநராகப் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் 30-ஆம் தேதி இவரை, கைப்பேசியில் தொடா்பு கொண்டு பேசியவா், ரூ. 5 லட்சம் வங்கிக் கடன் பெற்றுத் தருவதாகக் கூறினாா். இதற்கான ஆவணச் செலவுக்கு பணம் கேட்டாா். அதன்படி, ராஜ்மோகன் பல்வேறு தவணைகளாக ரூ. 98 ஆயிரத்தை அவா் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் செலுத்தினாா். ஆனால், குறிப்பிட்டபடி கடன் பெற்றுத் தரவில்லை.

பின்னா், இவரைத் தொடா்பு கொண்ட கைப்பேசி எண் அணைத்து வைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில், ராமநாதபுரம் இணையதளக் குற்றத் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் வெற்றிமேல் மாறன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT