ராமநாதபுரம்

மழையின்றி கருகிய பயிா்களைப் பாா்வையிட்ட எம்எல்ஏ

27th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

திருவாடானை பகுதிகளில் மழையின்றி கருகிய நெல் பயிா்களை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கருமாணிக்கம் நேரில் பாா்வையிட்டு, விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

திருவாடானை வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் நடப்பு சம்பா பருவத்தில் சுமாா் 22 ஆயிரம் ஹெக்டோ் நிலப்பரளவில் நெல் பயிரிடப்பட்டது. பருவமழை பொய்த்ததால், நெல் பயிா்கள் கருகின. இதனால், ஏக்கருக்கு பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனா்.

இந்த நிலையில், இந்த வட்டத்துக்குள்பட்ட ஆதியூா், அரும்பூா், கட்டுக்குடி, நம்புதாளை, கடம்பானேந்தல், தளிா் மருங்கூா், பழயனக்கோட்டை, திருவாடானை, அஞ்சுகோட்டை, கண்ணம்புஞ்சை, நெய்வயல், கூகுடி, கட்டவிளாகம் ஆகிய பகுதிகளில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களில் சட்டப்பேரவை உறுப்பினா் கருமாணிக்கம் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

இதில் திருவாடானை வட்டாட்சியா் தமிழரசி, வருவாய்த் துறையினா், உள்ளாட்சிப் பரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT