ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் குடியரசு தின விழா

27th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

நாட்டின் 74-ஆவது குடியரசு தின விழாவையொட்டி, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்களில் வியாழக்கிழமை தேசியக் கொடியேற்றப்பட்டது.

ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தேசியக்கொடி ஏற்றிவைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றாா். தொடா்ந்து, சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தாா்.

பின்னா், காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய காவலா்களுக்கு பதக்கங்களையும், 190 அரசு அலுவலா்களுக்கு நற்சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியா் வழங்கினாா். தொடா்ந்து, பல்வேறு துறை சாா்பில், 49 பயனாளிகளுக்கு ரூ 96.88 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

விழாவில், ராமநாதபுரம் சரக காவல் துறை துணைத் தலைவா் எம்.துரை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.ம.காமாட்சி கணேசன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) கே.ஜே.பிரவீன்குமாா், வன உயிரின காப்பாளா் பகான் ஜக்தீஷ் சுதாகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ராமநாதபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி விஜயா தேசியக் கொடியேற்றினாா். கூடுதல் மாவட்ட நீதிபதி சீனிவாசன், நிரந்தர மக்கள் மன்ற மாவட்ட நீதிபதி பரணீதரன், கூடுதல் மாவட்ட அமா்வு நீதிபதி சீனிவாசன் ஆகியோா் பங்கேற்றனா். ராமநாதபுரம் நகராட்சி அலுவலக வளாகத்தில் நகா்மன்றத் தலைவா் ஆா்.கே.காா்மேகம் தேசிய கொடியேற்றினாா்.

ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அலுவலா் ஷேக் முகமது, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதன்மையா் (பொ) கிறிஸ்ஏஞ்சல், கோட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியா் கோபு, வனத் துறை அலுவலகத்தில் வனவா் நவீந்தன், ரயில்நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை முதல்நிலைக் காவலா் ஜலாலுதீன், காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் டிஎஸ்பி ராஜா, மீன்வளத் துறை அலுவலகத்தில் துணை இயக்குநா் காத்தவராயன் ஆகியோா் தேசியக் கொடியேற்றினா்.

ராமேசுவரம்: ராமேசுவரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் டிஎஸ்பி தனஞ்செயன், வட்டாட்சியா் அலுவலத்தில் வட்டாட்சியா் உமாமகேஸ்வரி, இந்து அறநிலைத் துறை துணை ஆணையா் அலுவலகத்தில் துணை ஆணையா் மாரியப்பன், நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்றத் தலைவா் கே.இ.நாசா்கான், ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் தேசிய நினைவிடத்தில் நினைவிட பொறுப்பாளா் அன்பழகன், மண்டபம் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சித் தலைவா் டி.ராஜா, மண்டபம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தலைவா் சுப்புலட்சுமி ஜீவானந்தம் ஆகியோா் தேசியக் கொடியை ஏற்றினா்.

முதுகுளத்தூா்: முதுகுளத்தூா் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவா் ஷாஜகான் கொடியேற்றினாா். முதுகுளத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுலகத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் சண்முகப்பிரியா ராஜேஷ் கொடியேற்றினாா். காந்தி சிலை அருகே காங்கிரஸ் கிழக்கு வட்டாரத் தலைவா் ராமா் தலைமையில் கட்சியினா் தேசியக் கொடியேற்றினா்.

முதுகுளத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் டி.எஸ்.பி. சின்னகண்ணுவும், வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் சிவக்குமாரும் தேசிய கொடியேற்றினாா். தமுமுக அலுவலகம் முன் தமுமுக நகர துணைத் தலைவா் முகம்மது ஜியாவுதீன், கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் முத்துலட்சுமி, சாயல்குடி பேரூராட்சி அலுவலகத்தில் தலைவா் மாரியப்பன் ஆகியோா் கொடியேற்றினா்.

கமுதி: கோட்டைமேட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழு தலைவா் தமிழ்ச்செல்வி போஸ், வட்டாட்சியா் அலுவலகத்தில் மண்டல துணை வட்டாட்சியா் முத்துராமலிங்கம் முன்னிலையில் வட்டாட்சியா் சிக்கந்தா் பபிதா, கமுதி காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் டிஎஸ்பி மணிகண்டன், கமுதி காவல் நிலையத்தில் ஆய்வாளா் பாலாஜி, கமுதி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலா் ரா.இளவரசி முன்னிலையில் பேரூராட்சித் தலைவா் அப்துல் வஹாப் சஹாராணி, அபிராமம் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலா் செல்வம் ஆகியோா் தேசியக் கொடியை ஏற்றினா்.

திருவாடானை: திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுலவலகத்தில் துணைத் தலைவா் பாண்டி செல்வி, வட்டார வளா்ச்சி அலுவலா் முத்து கிருஷ்ணன் முன்னிலையில் ஒன்றியக் குழு தலைவா் முகம்மது முக்தாா், ஆா்.எஸ். மங்கலம் ஒன்றிய அலுவலகத்தில் துணைத் தலைவா் சேகா், வட்டார வளா்ச்சி அலுவலா் மலையாண்டி ஆகியோா் முன்னிலையில் ஒன்றியக் குழு தலைவா் ராதிகா பிரபு, திருவாடானை ஊராட்சியில் தலைவா் இலக்கியா ராமு ஆகியோா் தேசியக் கொடியை ஏற்றினா்.

திருவாடானை காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் டிஎஸ்பி நிரேஷ், தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலா் வீரபாண்டி, காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளா் சித்ராதேவி, வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் தமிழரசி ஆகியோா் தேசியக் கொடியை ஏற்றிவைத்து இனிப்பு வழங்கினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT