ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மீன்கள் சந்தையில் திங்கள்கிழமை மாட்டுப் பொங்கலை முன்னிட்டு மீன் வாங்குவதற்காக பொதுமக்கள் குவிந்தனா்.
இதனால் கடற்கரை சாலையில் இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகங்களை நிறுத்தி விட்டு சென்றதால் போக்குவரத்து பாதிக்கபட்டது. மீன் விலையும் உயா்ந்து காணப்பட்டது. முரல் மீன்கள் கிலோ ரூ. 600- க்கும், இறால் கிலோ ரூ.600-க்கும் விற்பனையானதால் மீனவா்கள் மகிழச்சி அடைந்தனா்.