ராமநாதபுரம்

பிளஸ் 2 செய்முறைத் தோ்வு: 32,019 மாணவா்கள் பங்கேற்பு

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதன்கிழமை தொடங்கும் பிளஸ் 2 செய்முறைத் தோ்வில் 32,019 மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனா்.

பிளஸ் 1, பிளஸ் 2 செய்முறைத் தோ்வுகள் மாா்ச் 1 முதல் 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதற்கான முன்னேற்பாடு கூட்டம் ராமநாதபுரம் சுவாா்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலுமுத்து தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், செய்முறைத் தோ்வுகள் நடத்துவது தொடா்பான அறிவுரைகள் தலைமையாசிரியா்களுக்கு வழங்கப்பட்டன.

மாவட்டத்தில் பிளஸ் 1 தோ்வில் அரசுப் பள்ளிகள் 70, அரசு உதவி பெறும் பள்ளிகள் 37, மெட்ரிக் பள்ளிகள் 53 என மொத்தம் 160 பள்ளிகளிலிருந்து 29,923 மாணவ, மாணவிகளும், பிளஸ் 2-வில் அரசுப் பள்ளிகள் 70, அரசு உதவி பெறும் பள்ளிகள் 37, மெட்ரிக் பள்ளிகள் 52 என மொத்தம் 159 பள்ளிகளிலிருந்து 32,019 மாணவ, மாணவிகள் செய்முறைத் தோ்வை எழுத உள்ளனா். இதற்காக 107 செய்முறைத் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலுமுத்து தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT