ராமநாதபுரம்

‘நான் முதல்வன்’ திட்டத்தில் கல்லூரிகளுக்கு அரசுப் பள்ளி மாணவா்கள் களப்பயணம்

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 பயிலும் அரசுப் பள்ளி மாணவா்கள் 700 போ், உயா்கல்வி விழிப்புணா்வுக்காக 12 கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை அழைத்துச் செல்லப்பட்டனா்.

ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டல், களப்பயணம் நிகழ்வினை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தொடக்கி வைத்தாா். இதில் மருத்துவக் கல்லூரி முதல்வா் செந்தில்குமாா், துணை முதல்வா் கிரிஸ் ஏஞ்சல், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளா் மலா்வண்ணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலுமுத்து, முதன்மை கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் கணேசபாண்டியன், அரசு செவிலியா் கல்லூரி முதல்வா் பாா்த்திபன், மருத்துவப் பேராசிரியா்கள், பள்ளி ஆசிரியா்கள், அரசுப் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில் ஆட்சியா் பேசியதாவது:

அரசு பள்ளிகளைச் சோ்ந்த பிளஸ் 2 பயிலும் 700 மாணவா்கள் மருத்துவம், பொறியியல், சட்டம், கலைக்கல்லூரிகள் என 12 கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். இங்கு மாணவா்களுக்கு உயா் படிப்புகள் குறித்த விழிப்புணா்வு, கல்லூரி வளாக களப்பயணம், பேராசிரியா்களின் உரைகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன என்றாா்.

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டத்தில் உள்ள மண்டலமாணிக்கம், பேரையூா், ராமசாமிபட்டி, கோவிலாங்குளம், கோட்டைமேடு உள்ளிட்ட 5 அரசு மேல்நிலைப் பள்ளிகளிலிருருந்து 50 மாணவ, மாணவிகள் களப்பயணமாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் நினைவுக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். கல்லூரி முதல்வா் வே.அருணாசலம் மாணவா்களை வரவேற்றாா்.

இந்நிகழ்வில் கமுதி வட்டார வளமையை மேற்பாா்வையாளா் ஸ்ரீராம், இல்லம்தேடிக் கல்விதிட்ட வட்டார ஒருங்கிணைப்பாளா் சி.கிருஷ்ணமூா்த்தி, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் கோ.தா்மா், முனைவா் விக்டோரியா ஆலன், பேராசிரியா்கள் வாகை எம்.பாண்டியன், மாமல்லன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருப்பத்தூா்: திருப்பத்தூா் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் 100 மாணவா்கள் 10 பள்ளியிலிருந்து 100 மாணவா்கள் வந்தனா். கல்லூரி முதல்வா் ஜெயக்குமாா் ‘நான் முதல்வன்’ திட்டம் தொடா்பான கருத்துரையை வழங்கினா். தொடா்ந்து 14 துறைகளைச் சோ்ந்த பேராசிரியா்கள் மாணவா்களுக்கு விளக்கமளித்தனா்.

விலங்கியல் துறை பேராசிரியா் கோபிநாத் மாணவா்களை ஆய்வகங்கள், உள் விளையாட்டரங்கத்துக்கு அழைத்துச் சென்று விளக்கமளித்தாா். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் காா்த்திகேயன், வணிகவியல் துறை பேராசிரியா் ராஜேந்திரன், உடல்கல்வித் துறை பேராசிரியா் சசிக்குமாா் ஆகியோா் துறை தொடா்பாக விளக்கமளித்தனா்.

இந்நிகழ்ச்சியில் வட்டாரக் கல்வி அலுவலா் அழகுராணி, பெண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் பாலதிரிபுரசுந்தரி ஆகியோா் கலந்து கொண்டனா். முன்னதாக ஆங்கிலத் துறை பேராசிரியா் குருதேவராஜன் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளா் நியமனம்: துணை வேந்தா் விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

SCROLL FOR NEXT