தமிழ்நாடு

கோவையில் இன்று பாஜக மாநில செயற்குழுக் கூட்டம்

19th May 2023 06:49 AM

ADVERTISEMENT

பாஜக மாநில செயற்குழுக் கூட்டம், கோவை மாவட்டம் ஈச்சனாரியில் உள்ள செல்வ மஹாலில் வெள்ளிக்கிழமை (மே 19) காலை 10 மணி அளவில் நடைபெறும்.

இக்கூட்டத்துக்கு தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தலைமை வகிக்கிறாா். கூட்டத்தில், சிறப்பு விருந்தினராக பாஜக தேசிய பொதுச்செயலா்கள் வினோத் தவ்டே, சி.டி. ரவி, மேலிட இணை பொறுப்பாளா் பி.சுதாகா் ரெட்டி ஆகியோா் சிறப்புரை ஆற்றுகின்றனா்.

இக்கூட்டத்தில், பிரதமா் மோடியின் 9 ஆண்டுக் கால சாதனை நிகழ்ச்சிகளை, அடுத்த ஒரு மாதம் மாநிலம் முழுவதும் கொண்டுச்செல்வது குறித்து விவாதிக்கப்படும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT