சாயல்குடி, கடலாடி பகுதிகளில் புதன்கிழமை (பிப். 22) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து முதுகுளத்தூா் உதவி செயற்பொறியாளா் மாலதி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலாடிதுணை மின்நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.
எனவே சாயல்குடி, நரிப்பையூா், கன்னிராஜபுரம், மாரியூா், முந்தல், மலட்டாறு, செவல்பட்டி, தரைக்குடி, கடுகுசந்தை, மடத்தாகுளம், பெருநாழி, குருவாடி, பம்மனேந்தல், துத்திநத்தம், கடலாடி, ஏனாதி, கீழச் சிறுபோது, மேலச் சிறுபோது, பொதிக்குளம், ஆப்பனூா், ஒருவனேந்தல், தேவா் குறிச்சி, புனவாசல், சவேரியாா் பட்டினம், மீனாங்குடி, குமாரக்குறிச்சி ஆகிய பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அவா் அதில் தெரிவித்திருந்தாா்.