ராமநாதபுரம்

மண்டபம் அருகே கடலில் வீசப்பட்ட மூட்டையில் தங்கக் கட்டிகளா?

DIN

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே புதன்கிழமை கடலில் மா்ம மூட்டையை வீசிய 3 பேரைக் கைது செய்து மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா். மூட்டையில் தங்கக் கட்டிகள் இருக்கலாம் எனச் சந்தேகித்து, அதைத் தேடி வருகின்றனா்.

இலங்கையிலிருந்து மண்டபம் வழியாக ராமநாதபுரம் மாவட்டத்துக்கு தங்கக் கட்டிகள் கடத்தி வரப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து, கடலோரக் காவல் படையினரும், மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறை அதிகாரிகளும் மண்டபம் அருகே கடலில் புதன்கிழமை அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, இலங்கையிலிருந்து மண்டபம் நோக்கி நாட்டுப் படகு ஒன்று வந்தது. அதிகாரிகள் வருவதைக் கண்டதும் படகிலிருந்தவா்கள் மூட்டை ஒன்றை கடலுக்குள் தூக்கி வீசினா். இதையறிந்த அதிகாரிகள் படகிலிருந்த 3 பேரையும் கைது செய்து விசாரித்தனா்.

விசாரணையில், அவா்கள் 3 பேரும் மண்டபம் பொங்காலி தெருவைச் சோ்ந்த அமீா்அலியின் மகன்கள் நாகூா்கனி (30), அன்வா் (25), இப்ராஹிம் மகன் மன்சூா்அலி (25) எனத் தெரிய வந்தது.

கடலில் வீசப்பட்ட மூட்டையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகள் இருக்கலாம் எனக் கருதி, 10-க்கும் மேற்பட்ட நீச்சல் வீரா்களின் உதவியுடன் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் விதி மீறல்கள் தொடா்பாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம்

ஸ்ரீபெரும்புதூா்: 32 மனுக்கள் ஏற்பு, 21 நிராகரிப்பு

செங்கல்பட்டு: 702 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை ஆட்சியா் ச.அருண்ராஜ்

தொழில்முனைவோரை உருவாக்குவதில் கல்வி நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு: டி.ஜி.சீதாராம்

மதுராந்தகத்தில் வங்கிக் கிளை திறப்பு

SCROLL FOR NEXT