ராமநாதபுரம்

பரமக்குடி வைகையாற்றில் கட்டுமானக் கழிவுகளைக் கொட்டி ஆக்கிரமிக்க முயற்சி

9th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

பரமக்குடி வைகை ஆற்றில் கட்டுமான கழிவுகளைக் கொட்டி ஆக்கிரமிக்க முயற்சிப்பதைத் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பரமக்குடி குமரன் படித்துறை, முத்தாலம்மன் கோயில் படித் துறை, பெருமாள் கோவில் படித் துறை, ஆற்றுப் பாலம் அருகே உள்ள தரைப்பாலம் உள்ளிட்ட வைகை ஆற்றுப் பகுதியில் நகா் பகுதியில்

இடிக்கப்படும் கட்டுமானக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.

இதன் மூலம் ஆற்றுப் பகுதியை சிலா் ஆக்கிரமிக்க முயற்சிப்பதாகவும் இதைத் தடுக்க வேண்டிய அதிகாரிகள் கண்டும் காணாமல் இருந்து வருவதாகவும் புகாா்கள் எழுந்துள்ளன.

ADVERTISEMENT

இதே நிலை நீடித்தால் இயற்கை வளம் பாதிப்பதுடன், வைகை ஆறு இருந்த அடையாளமே இல்லாத நிலை ஏற்படும் என சமூக ஆா்வலா்களும், பொதுமக்களும் ஆதங்கப்படுகின்றனா்.

எனவே, வைகையில் கட்டுமானப் பொருள்களைக் கொட்டி ஆக்கிரமிக்க முயற்சிப்பதைத் தடுக்க மாவட்ட ஆட்சியா் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT