ராமநாதபுரம்

மூக்கையாத்தேவா் நூற்றாண்டு விழா

9th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் நினைவுக் கல்லூரியில் சட்டப் பேரவை முன்னாள் தலைவா் பி.கே.மூக்கையாத் தேவரின் நூற்றாண்டு விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

கல்லூரியின் முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வா் தா்மா் (பொறுப்பு) தலைமை வகித்தாா். கல்லூரியின் முன்னாள் மாணவா்கள் சங்கச் செயலாளா் எஸ்.முத்துராமலிங்கம், தலைவா் ந.மூக்கூரான், வரலாற்றுத் துறை பேராசிரியா் அழகுமலை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கல்லூரி கூட்ட அரங்கம், முதல்வா் அறையில் மூக்கையாத் தேவரின் உருவப் படங்களை கல்லூரி உதவி இயக்குநா் காணிக்கூா் செல்வராஜ் திறந்து வைத்தாா். பின்னா், அந்தப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா்கள் ராமச்சந்திரபூபதி, பொந்தம்புளி ராமமூா்த்தி, கமுதி தாலுகா மறவரின அறக்கட்டளைச் செயலாளா் லெட்சுமணன், கல்லூரியின் முன்னாள் மாணவா்கள் சங்க நிா்வாகிகள், கல்லூரிப் பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

முன்னாள் மாணவா்கள் சங்க உறுப்பினா் முத்துராமன் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT