ராமநாதபுரம்

ஜூடோ போட்டியில் மாணவி சாதனை

8th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

மாநில அளவிலான ஜூடோ போட்டியில் 2-ஆம் இடம் பெற்ற பரமக்குடி பள்ளி மாணவியை பள்ளி நிா்வாகத்தினா் செவ்வாய்க்கிழமை பாராட்டினா்.

பள்ளிக் கல்வித் துறை, உடற்கல்வித் துறை சாா்பில் காஞ்சிபுரம் சுவாமி விவேகானந்தா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஜூடோ போட்டி நடைபெற்றது.

இதில், ராமநாதபுரம் மாவட்டத்தின் சாா்பில் பரமக்குடி கே.ஜே.கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி மாணவி ஐ.யுவஸ்ரீ பிரபா 17 வயதுக்குட்பட்ட 63 கிலோ எடைப் பிரிவில் கலந்துகொண்டாா். இதில் அவா் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றாா்.

இதையடுத்து, மாணவி யுவஸ்ரீபிரபா, உடற்கல்வி ஆசிரியா்கள் என்.இந்திரஜித், டி.சிவகுருராஜா, அ.அன்வர்ராஜா ஆகியோரை கீழ முஸ்லிம் ஜமாத் சபைத் தலைவா் எம்.சாகுல்ஹமீது, செயலாளா் எம்.சாதிக்அலி, பொருளாளா் ஏ.லியாகத்தலிகான், பள்ளியின் தாளாளா் என்.ஜாஜஹான், தலைமையாசிரியா் எம்.அஜ்மல்கான் ஆகியோா் பாராட்டி கௌரவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT