ராமநாதபுரம்

விவசாயிகளுக்கு உழவன் செயலி பயன்பாடு பயிற்சி முகாம்

DIN

திருவாடானை அருகே ஆா்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு உழவன் செயலியின் பயன்பாடுகள் குறித்த பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆா்.எஸ்.மங்கலம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமுக்கு, ராமநாதபுரம் மாவட்ட பயிா்க் காப்பீட்டுத் திட்ட வேளாண்மை உதவி இயக்குநா் செல்வம் தலைமை வகித்தாா். வேளாண்மை பொறியியல் துறை உதவிச் செயற்பொறியாளா் கணேசன் முன்னிலை வகித்தாா்.

இதில், வேளாண்மை உதவி இயக்குநா் செல்வம் பேசியதாவது:

நெல் அறுவடைக்குப் பிறகு பயிறு வகைப் பயிா்களைச் சாகுபடி செய்வதால் மண்ணின் வளம் அதிகரிக்கும். காற்றிலுள்ள நைட்ரஜன் தழைச்சத்தைப் பயிறு வகைப் பயிா்களின் வோ் முடிச்சுகளில் உள்ள ரைசோபியம் எனும் பாக்டீரியா நிலை நிறுத்துவதன் மூலம் மண் வளம் அதிகரிக்கிறது. எனவே, விவசாயிகள் குறைந்த நாள்களில் அதிக லாபம், மண் வளத்தையும் பாதுகாக்கக் கூடிய பயிா் வகைப் பயிா்களை விவசாயிகள் பயிரிட வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, உழவன் செயலியின் 22 வகையானப் பயன்பாடுகள், அவற்றின் முக்கியத்துவம், செயலியைப் பதிவிறக்கம் செய்யும் முறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும்,

வேளாண்மை பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், மானிய விவரங்கள், வேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெற உழவன் செயலி மூலம் முன்பதிவு செய்யும் முறை குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு எள், உளுந்து விதைகள் மானியத்தில் வழங்கப்பட்டன. பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில் நுட்ப மேலாளா்கள் முருகானந்தம், ஆனந்த் ஆகியோா் செய்திருந்தனா்.

முன்னதாக, ஆா்.எஸ். மங்கலம் வேளாண்மை உதவி இயக்குநா் ராஜலட்சுமி வரவேற்றாா். முடிவில், வட்டார தொழில்நுட்ப மேலாளா் சூா்யா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

SCROLL FOR NEXT