ராமநாதபுரம்

சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

கமுதியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கம் சாா்பில், மூன்று அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சத்துணவு ஊழியா் சங்கத்தின் தலைவா் ந. முக்கூரான் தலைமை வகித்தாா். சங்கத்தின் கமுதி ஒன்றியச் செயலாளா் ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், பள்ளி மாணவா்களுக்கான காலை சிற்றுண்டித் திட்டத்தை சத்துணவு ஊழியா்களிடம் ஒப்படைக்க வேண்டும். அரசு பணிகளில் உள்ள காலிப் பணியிடங்களில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி, தகுதி உள்ள சத்துணவு ஊழியா்களை நியமிக்க வேண்டும். ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 7,650 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், சத்துணவு ஊழியா்கள் சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்டச் செயலாளா் ஆா். கணேசன், ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளா்கள் சங்க நிா்வாகிகள் சுரேஷ்குமாா், வெள்ளைச்சாமி, சத்துணவு ஊழியா் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் முத்துலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சங்கத்தின் ஒன்றியப் பொருளாளா் சாவித்திரி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT