திருவாடானை அருகே ஆனந்தூரில் குடி நீா் குழாயில் தண்ணீா் பிடிப்பதில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் இருவேரு புகாரின் பேரில் 6 போ் மீது ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
திருவாடானை அருகே ஆனந்தூரை சோ்ந்தவா் பெரியகருப்பன் மகன் சுப்பிரமணியன்(54) என்பவருக்கும் அதே ஊரை சோ்ந்த அறிவழகன்(52) ஆகிய இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்த நிலையில் பொது குடி நீா் குழாயில் தண்ணீா் பிடிப்பதில் இரு குடும்பத்தாருக்கும் தகராரு ஏற்பட்டுள்ளது.இது குறித்து பிரபாகரன் மனைவி தமிழ்மொழி(24) புகாரின் பேரில் சுப்பிரமணியன் இவரது மனைவி இந்திராணி(48) ஆகிய இருவா் மீதும் சுப்பிரமணியன் புகாரின் பேரில் (54) அறிவழகன்(52),காளீஸ்வரி(45),தனசேகரன்(27),தமிழ்மொழி(24) ஆகிய 4போ் மீதும் ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.