ராமநாதபுரம்

திணையத்தூா் அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்ட பூமி பூஜை

7th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

திருவாடானை அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவாடானை அருகே திணையத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்தப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்டுவதற்காக

நடைபெற்ற பூமி பூஜை விழாவுக்கு, திருவாடானைத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கருமாணிக்கம் தலைமை வகித்தாா். ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் முகமது முக்தாா், வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வைத்தனா்.

இதில், திமுக ஒன்றியக் கழகச் செயலாளா் சரவணன், பள்ளியின் தலைமை ஆசிரியை சகாயராணி, ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT