ராமநாதபுரம்

ஆா்.எஸ்.மங்கலம் அங்கன்வாடி ஊழியா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

7th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

திருவாடானை அருகே ஆா்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வாளகத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் கோரிக்கை ஆா்பாட்டம் நடைபெற்றது.

திருவாடானை அருகே ஆா்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பின் சாா்பில் பல்வேரு கோரிக்கைகளை வலியுருத்தி திங்கள்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் வட்டார தலைவா் முத்தழகு தலைமை வகித்தாா்,செயலா் மிக்கேல் மாறன் முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் சத்துணவு அங்கன்வாடி ஊழியா்களுக்கு, கிராம வருவாய் உதவியாளா்களுக்கு வழங்குவது போல் அகவிலை படியுடன் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 6750 வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு துறையில் உள்ள காலிப்பணியிடங்களில் 50% சத்துணவு அங்கன்வாடி ஊழியா்களை கால முறை ஊதியத்தில் நியமித்திட வேண்டும். காலை உணவு திட்டத்தை தனியாா் வசம் ஒப்படைக்காமல் சத்துணவு திட்டத்தில் இணைத்து விட வேண்டும் . என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.இந்த ஆா்ப்பாட்டத்தில் சுமாா் 100க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT