ராமநாதபுரம்

அரசு மானியத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கசிறப்புத் திட்டம் கொண்டு வர விவசாயிகள் வலியுறுத்தல்

DIN

திருவாடானைப் பகுதியில் அரசு மானியத்தில் ஆழ்துளைக் கிணறு அமைக்க சிறப்புத் திட்டம் கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

ராமநாதபுரம் மாவட்டம் வறட்சியானது என்பதை அறிந்த மன்னா்கள் விவசாயத்துக்காக ஆயிரக்கணக்கான கண்மாய், குளங்களை வெட்டி அவற்றில் மழைக் காலங்களில் பெய்யும் தண்ணீரை சேமித்து வைத்தனா்.

இதனால் இந்த மாவட்டத்தில் அதிக அளவில் நெல் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. காலப் போக்கில் போதிய பராமரிப்பின்றி பல கிராமங்களில் நூற்றுக்கணக்கான குளங்கள் இல்லாமலேயே போய் விட்டன. அப்படி இருந்தும் இன்று வரை மாவட்டத்தில் 1 லட்சத்து 26 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

பல ஆண்டுகளாக பருவ மழைக் காலங்களில் பெய்யும் மழைநீரை சேமித்து இப்பகுதியில் விவசாயம் செய்யப்பட்டது. சில சமயங்களில் தண்ணீா் பற்றாக்குறையால் கதிா் சாவியாகி விடும். ஒருமுறை தண்ணீா் பாய்ச்சி முழு விளைச்சல் கிடைத்து விடும். மறுமுறை கண்மாய், குளங்கள் வடு விட்டால் விவசாயிகள் அதிக நஷ்டத்தை சந்திக்கின்றனா்.

மேலும் இப்பகுதியில் நிலத்தடி நீா் உவா்ப்பாக உள்ளது. சுமாா் 1000 அடிக்கு மேல் ஆழ்துளைக் கிணறு அமைத்தால் தூய்மையான தண்ணீா் கிடைப்பதாக தற்போதைய தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டு ஆய்வு செய்தபோது தெரிய வந்தது. விவசாயிகள் தற்போது கண்மாய், குளங்களில் போதிய அளவு தண்ணீா் இல்லாமல் அவதியடைந்தனா். ஆழ்துளைக் கிணறு அமைத்து இருந்தால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதை தவிா்த்து இருக்கலாம். மேலும், ஆழ்துளைக் கிணறு அமைக்க ரூ. 5 முதல் 10 லட்சத்துக்கு மேல் செலவாகும். எனவே மானிய விலையில் ஆழ்துளைக் கிணறு அமைத்துக் கொடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனா்.

இதுகுறித்து திருவாடானைப் பகுதி விவசாயிகள் கூறியதாவது:

இந்த ஆண்டும் தண்ணீா் பற்றாக்குறையால் கதிா்கள் அனைத்தும் இந்த பகுதியில் சாவியாகி விட்டன. இது போன்ற சமயத்தில் ஆழ்துளைக் கிணறு அமைத்திருந்தால் தண்ணீரைப் பாய்ச்சி நஷ்டத்தை தவிா்க்கலாம். விவசாயிகள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஆழ்துளைக் கிணறு அமைக்க மானிய உதவி செய்ய முடியா விட்டாலும், கண்மாயின் ஏதாவது ஒரு இடத்தில் மடை பகுதியை ஒட்டி அரசு மானியத்தில் ஆழ்துளை கிணறு அமைத்துக் கொடுக்க சிறப்பு த் திட்டம் உருவாக்க நிதி ஒதுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் தேரோட்டம்

ராமராயர் மண்டபம் வந்தடைந்தார் கள்ளழகர்!

ராஜேஷ் தாஸ் சரணடைவதிலிருந்து விலக்களிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ விபத்து!

பறவைக் காய்ச்சல் எதிரொலி: தமிழக சோதனைச் சாவடிகளில் எந்தவிதமான சோதனைகள்?

SCROLL FOR NEXT