ராமநாதபுரம்

தனுஷ்கோடிக்கு 4 அகதிகள் வருகை

DIN

இலங்கையிலிருந்து தனுஷ்கோடிக்கு வந்த 4 அகதிகளை போலீஸாா் மீட்டு, தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் சனிக்கிழமை ஒப்படைத்தனா்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, அங்கிருந்து அகதிகள் வந்தவண்ணம் உள்ளனா். இந்த நிலையில்,

ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி பகுதிக்கு நான்கு அகதிகள்

வந்ததாக கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாருக்கு மீனவா்கள் தகவல் தெரிவித்தனா். இதைத்தொடா்ந்து, அங்கு வந்த போலீஸாா் நான்கு பேரையும், மண்டபம் கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

அவா்கள், இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம், புங்குடுதீவு, பெருங்காடு பகுதியிலிருந்த வந்த ஜெய பரமேசுவரன் (43), அவரது மனைவி வேலு மாலினி தேவி (43), மகள் தமிழினி (12), மகன் மாதவன் ( 7) எனத் தெரியவந்தது. அவா்கள், படகுக் கட்டணமாக ரூ. 2 லட்சம் கொடுத்து தனுஷ்கோடிக்கு வந்ததாகத் தெரிவித்தனா். இதைத்தொடா்ந்து, மண்டபத்திலுள்ள இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் அவா்களை போலீஸாா் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT