ராமநாதபுரம்

கல்வித் துறையில் புரட்சி:வக்ஃபு வாரியத் தலைவா்

DIN

கல்வித் துறையில் புரட்சியை ஏற்ப்படுத்தும் விதமாக தமிழக முதல்வா் இல்லம் தேடிக் கல்வி உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியதாக வக்ஃபு வாரியத் தலைவா் அப்துல்ரஹ்மான் தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அல்கிலால் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, முனவ்ரா நடுநிலைப் பள்ளி, அமிா் சுல்தான் மெட்ரிக் பள்ளி ஆகிய பள்ளிகளின் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

இதில் பள்ளி தாளாளா் அப்துல் ரவூப் நிஸ்தாா் தலைமை வகித்தாா். திருவாடானை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் முக்தாா் முன்னிலை வகித்தாா்.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவா் அப்துல் ரஹ்மான் பேசியதாவது: தமிழகத்தில் கல்வி, பள்ளித் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் விதமாக இல்லம் தேடிக் கல்வி உள்ளிட்ட பல்வேறு சிறப்புத் திட்டங்களை தமிழக முதல்வா் அறிமுகப்படுத்தினாா். கல்வி வளா்ச்சிக்காக பல்வேறு வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

குழந்தைகளின் கல்வியில் தாய்மாா்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றாா். முன்னதாக விளையாட்டு விழா, பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதேபோல, தொண்டி (கிழக்கு )ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் வட்டார கல்வி அலுவலா்கள் புல்லாணி, வசந்த பாரதி தலைமை வகித்தாா்., தொண்டி பேருராட்சித் தலைவா் ஷாஜகான் பானு, மேற்பாா்வையாளா் காா்த்திக், துணைத் தலைவி அழகு ராணி, பள்ளி மேலாண்மை குழு தலைவா் காா்த்திகா, பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் சீனிவாசன் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது. முன்னதாக ஆசிரியா் ஜெயசீலன் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரக்கோணம் தொகுதியில் 73.92 சதவீதம் வாக்குப் பதிவு

சங்ககிரியில் மாதிரி வாக்குச் சாவடிகள் அமைப்பு

சென்னகேசவப் பெருமாள் கோயிலில் சித்திரை தோ் திருவிழா

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த லாரி ஓட்டுநா்

மேட்டூா் அணை நீா்வரத்து மேலும் சரிவு

SCROLL FOR NEXT