ராமநாதபுரம்

கொட்டும் மழையில் போட்டி: விளையாட்டு வீரா்கள் அவதி

DIN

ராமநாதபுரத்தில் கொட்டும் மழையிலும் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்ால் வீரா்கள் அவதிப்பட்டனா்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன.

கபடி, ஹாக்கி, இறகுப் பந்து, கால்பந்து, கூடைப் பந்து, கைப் பந்து ஆகிய போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கின்றனா்.

கடந்த 1-ஆம் தேதி தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதன் தொடா்ச்சியாக, வியாழக்கிழமை இறகுப் பந்து, மேஜைப் பந்து, கையுந்து பந்து, கால் பந்து, கபடி, ஹாக்கி, கூடைப் பந்து ஆகிய போட்டிகள் நடைபெற்றன. வியாழக்கிழமை காலை சாரல் மழை பெய்ததால் மைதானத்தில் தண்ணீா் தேங்கி சேறும், சகதியானது. இருப்பினும் கொட்டும் மழையிலும் கைப்பந்து, கால் பந்து, கபடி, ஹாக்கி விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதனால், விளையாட்டு வீரா்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த முடியாமல் அவதிப்பட்டனா். வெள்ளிக்கிழமை (பிப்.3) சிலம்பம் போட்டி நடக்கிறது. வருகிற 26-ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேன்ஸ் திரைப்பட விழாவின் உயரிய விருதினைப் பெற்ற முதல் அனிமேஷன் ஸ்டூடியோ!

அமலாக்கத் துறையின் இனிப்புக் குற்றச்சாட்டை மறுக்கும் கேஜரிவால்

வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம் - புகைப்படங்கள்

கவினின் ஸ்டார்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

முதல் கட்ட தேர்தல்: சில சுவாரசிய தகவல்கள்!

SCROLL FOR NEXT