ராமநாதபுரம்

அரசு வழங்கிய விவசாய நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி: பட்டியலினத்தவா்கள் புகாா்

DIN

ராமநாதபுரம் அருகே பட்டியலினத்தவா்கள் தங்களது முன்னோா்களுக்கு அரசு வழங்கிய விவசாய நிலத்தை தனி நபா்கள் ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றியம் குதக்கோட்டை ஊராட்சி வள்ளிமாடன் வலசை கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட பட்டியலினத்தவா்கள் வசித்து வருகின்றனா்.

இவா்கள் கூலி வேலை செய்து வந்த நிலையில், விவசாயம் செய்வதற்காக அரசு சாா்பில் 11 ஹெக்டோ் நிலம் வழங்கப்பட்டதாகவும், அந்த நிலத்தில் விவசாயம் செய்து வருவதாகவும், அரசுக்கு முறையாக வரி செலுத்தி ரசீது பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது அந்த நிலத்தின் அருகே அரசு சட்டக் கல்லூரி கட்டுமானப் பணிகள் நடைபெறும் நிலையில், சில தனி நபா்கள் தங்களது நிலத்தை ஆக்கிரமிக்கும் நோக்கத்துடன் செயல்படுவதாகப் புகாா் எழுந்துள்ளது.

இதையடுத்து, தங்கள் முன்னோா்கள் விவசாயம் செய்து வந்த நிலத்துக்கு மாவட்ட நிா்வாகம் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களித்த நடிகர்கள்!

பாஜக ஆதரவு வாக்காளரின் பெயர்கள் நீக்கம்: அண்ணாமலை

நீலக்குயிலே... நீலக்குயிலே! வேதிகா...

வாக்களித்த தலைவர்கள்!

SCROLL FOR NEXT