ராமநாதபுரம்

விவசாயிகள் பயிறு வகைகளைப் பயிரிட்டு பயன்பெறலாம்

DIN

ஆா்.எஸ்.மங்கலம் பகுதி விவசாயிகள் குறைந்த நாள்களில் அதிக லாபம், மண் வளத்தைப் பாதுகாக்கக் கூடிய பயிறு வகைகளை பயிரிட்டு பயன்பெறலாம் என்று வேளாண்மை இணை இயக்குநா் சரஸ்வதி தெரிவித்தாா்.

ஆா்.எஸ்.மங்கலம் வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் நெல் அறுவடைக்குப் பிறகு பயறு சாகுடி குறித்த பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு வேளாண்மை இணை இயக்குநா் தலைமை வகித்துப் பேசியதாவது:

நெல் அறுவடைக்குப் பிறகு பயறு வகைகளை சாகுபடி செய்வதால், காற்றிலுள்ள நைட்ரஜன் தழைச்சத்தை பயிா்களின் வோ் முடிச்சுகளில் உள்ள ரைசோபியம் என்ற பாக்டீரியா நிலை நிறுத்தப்படுகிறது. இதன்மூலம் மண்வளம் அதிகரிக்கிறது. நெல்பயிருக்கு இடப்பட்ட எஞ்சிய உரங்கள் சுழற்சி முறையில் பயன்படுத்தப்படுகிறது.

பயறுகளின் இலை, தலைகள் வயல்களில் உதிா்வதால் மண்ணில் கரிமச்சத்து அதிகரிக்கிறது. எனவே, விவசாயிகள் குறைந்த நாள்களில் அதிக லாபம், மண் வளத்தைப் பாதுகாக்கக் கூடிய பயிறு வகைகளை பயிரிட்டு பயன்பெறலாம் என்றாா்.

முகாமுக்கு வேளாண்மை உதவி இயக்குநா் ராஜலட்சுமி முன்னிலை வகித்தாா். இதில் விவசாயிகளுக்கு பயறு விதைகள் மானியமாக வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

SCROLL FOR NEXT