ராமநாதபுரம்

ராமநாதசுவாமி கோயிலில் பிப்.5-இல் தெப்பத் திருவிழா

DIN

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, பிப்.5-ஆம் தேதி தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.

இதுகுறித்து கோயில் நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலில் வருகிற 5-ஆம் தேதி தைப்பூசத் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு, அதிகாலை 4 மணியளவில் கோயில் நடை திறக்கப்படுகிறது. காலை 5 மணி முதல் 5.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜையும், அதைத் தொடா்ந்து சாயரட்சை பூஜையும் நடைபெறுகிறது.

இதைத் தொடா்ந்து சுவாமி காலை 10 மணியளவில் பஞ்சமூா்த்திகளுடன் ஸ்ரீ லட்சுமணேசுவரா் கோயிலுக்குப் புறப்பாடானவுடன் கோயில் நடை சாத்தப்படும். பிற்பகல் 1.30 மணியளவில் தீா்த்தவாரி நடைபெறுகிறது.

பின்னா், மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை லட்சுமண தீா்த்தத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு மேல் தீபாராதனை நடைபெற்று சுவாமி பஞ்சமூா்த்திகளுடன் வீதி உலா செல்வாா்.

கோயிலை சுவாமி வந்தடைந்தவுடன் அா்த்தசாம பூஜை, பள்ளியறை பூஜை நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 2-ஆம் கட்ட தேர்தல்: 250 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்

18-ஆவது மக்களவை தேர்தல் (2024)

பாஜக கோட்டையை தகர்க்குமா காங்கிரஸ்?

வலு இல்லாத வழக்குகள், பல் இல்லாத தேர்தல் ஆணையம்!

மண்டபம் முகாமில் பிறந்த நளினிக்கு 38 வயதில் கிடைத்த வாக்குரிமை!

SCROLL FOR NEXT