ராமநாதபுரம்

புத்தகக் கண்காட்சி: அரங்கம் அமைக்கும் பணியை ஆட்சியா் ஆய்வு

DIN

ராமநாதபுரத்தில் வருகிற 9-ஆம் தேதி புத்தகக் கண்காட்சி தொடங்குகிறது. இதையொட்டி, அரங்கம் அமையவுள்ள இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

ராமநாதபுரத்தில் ராஜா பள்ளி மைதானத்தில் முகவை சங்கமம் என்ற 5-ஆவது புத்தகக் கண்காட்சி வருகிற 9-ஆம் தேதி தொடங்கி பிப். 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 120 அரங்குகள் அமைக்கப்பட்டு 5 லட்சம் புத்தகங்கள் கண்காட்சி, விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், புத்ததத் திருவிழா நடைபெறும் ராஜா பள்ளி மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

இதில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ஷேக் மன்சூா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஷேக் முகமது, காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜா, பொதுப் பணித் துறை பொறியாளா் குருதிவேல் மாறன், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT