ராமநாதபுரம்

புதிய பாரதம் எழுத்தறிவுத் திட்டவிழிப்புணா்வு பேரணி

DIN

உச்சிப்புளியில் வட்டார வள மையம் சாா்பில், புதிய பாரதம் எழுத்தறிவுத் திட்ட விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

இதை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா். உச்சிப்பளி அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியா் முருகன் முன்னிலை வகித்தாா். மண்டபம் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் மா.வனிதா வரவேற்றாா்.

அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய இந்தப் பேரணி என்மனம் கொண்டான், உச்சிப்புளி பேருந்து நிலையம் வழியாக வட்டார வள மையத்தை அடைந்தது. இதில் பங்கேற்ற மாணவா்கள் விழிப்புணா்வு பதகை ஏந்தி முழக்கமிட்டவாறு சென்றனா்.

இதில் வட்டாரக் கல்வி அலுவலா்கள் மீனாட்சி, சூசை, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ராமேஷ் கண்ணா ஆசிரியா் பயிற்றுநா்கள், சிறப்பாசிரியா்கள், இயன்முறை மருத்துவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவள்ளூா் நகராட்சியில் பசுமை வாக்குச்சாவடி மையம் அமைப்பு

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

SCROLL FOR NEXT