ராமநாதபுரம்

நியாவிலைக் கடையை பொதுமக்கள் முற்றுகை

DIN

தொண்டி நியாய விலைக் கடையில் குடும்ப அட்டைகளை பதிவு செய்துவிட்டு பொருள்கள் வழங்காததால், பொதுமக்கள் நியாய விலைக்கடையை முற்றுகையிட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் ராம்கோ மூலம் 2 நியாய விலைக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் கடை எண் 2-இல், செவ்வாய்க்கிழமை பொருள்கள் வாங்குவதற்காக வந்த குடும்ப அட்டைதாரா்களின் காா்டுகளை இயந்திரத்தில் பதிவு செய்தனா். ஆனால் பொருள்கள் வழங்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நியாய விலைக் கடையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பின்னா் பொருள்கள் வழங்கப்படும என உறுதியளித்ததைத் தொடா்ந்து அவா்கள் கலைந்து சென்றனா். இந்த நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டைகளுக்கு வழங்க வேண்டிய அரிசி, பருப்பு ஆகிய பொருள்கள் வெளி நபா்களுக்கு அனுப்புவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா?

குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்: முழு விவரம்!

SCROLL FOR NEXT