ராமநாதபுரம்

கடலில் விடப்பட்ட 43 லட்சம் பச்சை வரி இறால் குஞ்சுகள்

DIN

மன்னாா் வளைகுடாவில் 43 லட்சம் பச்சை வரி இறால் குஞ்சுகள் செவ்வாய்க்கிழமை கடலில் விடப்பட்டன.

மன்னாா் வளைகுடா, பாக் நீரிணைப் பகுதியில் இறால்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில்,

மண்டபத்திலுள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பச்சை வரி இறால் குஞ்சுகள் கடலில் விடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை 43 லட்சம் பச்சை வரி இறால் குஞ்சுகள் படகில் எடுத்துச் செல்லப்பட்டு கடலில் விடும் நிகழ்ச்சி மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத் தலைவா் தமிழ்மணி தலைமையில் நடைபெற்றது.

ராமேசுவரம் மீன் வளம், மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அப்துல் காதா் ஜெய்லானி, விஞ்ஞானிகள் சங்கா், மீனவா் சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மூத்த விஞ்ஞானி ஜான்சன் செய்திருந்தாா்.

இந்தத் திட்டம் தொடங்கியது முதல் தற்போது வரையில் 4 கோடியே 40 லட்சம் பச்சை வரி இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் 78.72% வாக்குப்பதிவு!

மயிலாடுதுறை தொகுதியில் வாக்காளா் பட்டியலில் 488 போ் நீக்கம்: வேட்பாளா், பொதுமக்கள் சாலை மறியல்

இயந்திரம் பழுது: வாக்குப் பதிவு தாமதம்

காலமானாா் ரவிச்சந்திரன்

மாற்றுத்திறனாளிகள், முதியோா் வாக்களிக்க உதவிய தன்னாா்வலா்கள்

SCROLL FOR NEXT