ராமநாதபுரம்

கோடை கால விளையாட்டுப் பயிற்சி முகாம் மே 1-இல் தொடக்கம்

26th Apr 2023 12:09 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் மே 1-இல் தொடங்குகிறது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ராமநாதபுரம் மாவட்ட அளவிலான கோடைகாலப் பயிற்சி முகாம் மே 1-ஆம் தேதி தொடங்கி 15 ஆம் தேதி வரை சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.

இதில் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, கையுந்துப் பந்து, இறகுப்பந்து ஆகிய விளையாட்டுகளில் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி நேரம் காலை 6.30 முதல் 8.30 மணி வரை, மாலை 4 முதல் 6 மணி வரை நடைபெறுகிறது.

ADVERTISEMENT

கோடை கால பயிற்சி முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள், மே 1-ஆம் தேதி காலை 7 மணிக்கு சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கத்துக்கு வந்து முன்பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT