ராமநாதபுரம்

திருவெற்றியூா் ஸ்ரீ பாகம்பிரியாள் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

26th Apr 2023 12:43 AM

ADVERTISEMENT

திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூரில் ஸ்ரீ பாகம்பிரியாள் சமேத வல்மீகநாத சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூரில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பாகம்பிரியாள் சமேத வல்மிகநாத சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. சிவாச்சாரியா்கள் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது.

இந்தத் திருவிழா நடைபெறும் 10 நாள்களும், சுவாமி கேடகம், பூதம், அன்ன வாகனம், வெள்ளி ரிஷப வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வருகிற சனிக்கிழமை (ஏப்.29) நடைபெறும். இதேபோல, மே 3-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும்.

கொடியேற்ற நிகழ்ச்சியில் தேவஸ்தான கண்காணிப்பாளா் செந்தில்குமாா், சிவகங்கை சமஸ்தான மேலாளா் இளங்கோ, கௌரவ கண்காணிப்பாளா் சுந்தர்ராஜன், திருவொற்றியூா் மணிகண்ட குருக்கள் மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT