திருவாடானை பகுதியில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு விவசாயிகள் பாரம்பரிய முறைப்படி தங்களது வயல்களில் ஏா் பூட்டி நெல் விதை விதைத்து சூரியனை வழிபட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதியில் திருவெற்றியூா் , அஞ்சுகோட்டை, கடம்பாகுடி, கீழஅரும்பூா், அரும்பூா், குளத்தூா், சின்ன தொண்டி, நம்புதாளை, புல்லுகுடி, ஏா்.ஆா்.மங்கலம், கொன்னக்குடி, சனவேலி, ஆனந்தூா், நத்தகோட்டை, மணக்குடி, பாரனூா், ஆவரேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு விவசாயிகள் பாரம்பரிய முறைப்படி தங்களது வயல்களில் குடும்பத்துடன் சென்று ஏா் பூட்டியும், சில பகுதிகளில் டிராக்டா், மண்வெட்டி ஆகிவற்றால் வயல்களைக் கிளறி விதைகளைத் தூவி சூரிய பகவானை வணங்கினா். இந்த ஆண்டு நல்ல மழை மழை பெய்தும், நல்ல விளைச்சல் தரவேண்டியும் இறைவனை வேண்டி வணங்கினா்.
Image Caption
~ ~