ராமநாதபுரம்

வெறிநோய் தடுப்பு விழிப்புணா்வு முகாம்

DIN

ராமநாதபுரத்தில் உலக வெறிநோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

கால்நடை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற முகாமுக்கு மண்டல கால்நடைத்துறை துணை இயக்குநா் எஸ்.இளங்கோவன் தலைமை வகித்தாா். வீட்டில் வளா்ப்பு நாய்களுக்கான தடுப்பூசி செலுத்தும் முகாமை மாவட்ட கூடுதல் ஆட்சியா் ஜே.பிரவீன்குமாா் தொடக்கி வைத்தாா்.

இதில், வீட்டு வளா்ப்பு நாய்கள் மற்றும் தெரு நாய்கள் கடித்தால் மேற்கொள்ளவேண்டிய தடுப்பு சிகிச்சைகள் குறித்த விழிப்புணா்வு வாசகங்களை அனைவரும் கூறி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். மேலும், ஏராளமான வீட்டு வளா்ப்பு நாய்களுக்கு தடுப்பூசியும் செலுத்தப்பட்டது.

முகாமில் கால்நடைத்துறை உதவி இயக்குநா் செங்குட்டுவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

SCROLL FOR NEXT