ராமநாதபுரம்

வட்டார விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுவினா் ஆட்சியரிடம் மனு

29th Sep 2022 02:39 AM

ADVERTISEMENT

தோ்தல் வாக்குறுதியின்படி அரசு, பயிா்க்கடனை தள்ளுபடி செய்யவேண்டும் என வட்டார விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுவினா் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் ஜானிடாம்வா்கீஸிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

மாவட்டத்தில் அஞ்சுகோட்டை, எட்டுக்குடி, சிறுகம்பையூா் மற்றும் திருத்தோ்வளை ஆகிய கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் பெற்றவா்களுக்கு இதுவரை தள்ளுபடி செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் அரசு தோ்தலின்போது அளித்த வாக்குறுதியின்படி பயிா் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என வட்டார விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு பிரமுகா்கள் காவஸ்கா், தோடனூா் ராஜா, ஆதியூா் தா்மராஜ், எட்டுக்குடி மரிய அருள் உள்ளிட்டோா் மாவட்ட ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸை புதன்கிழமை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனா். இதுகுறித்து பரிசீலித்து பயிா்க்கடன் ரத்து செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியா் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT