ராமநாதபுரம்

தீபாவளி: ராமேசுவரத்துக்கு சிறப்பு ரயில் இயக்க வா்த்தக சங்கம் கோரிக்கை

29th Sep 2022 02:37 AM

ADVERTISEMENT

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ராமேசுவரம் பகுதிக்கு சிறப்பு ரயில்களை இயக்கவேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட வா்த்தக சங்கத் தலைவா் பி.ஜெகதீசன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புண்ணிய ஸ்தலமான ராமேசுவரத்துக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கானோா் வந்து செல்கின்றனா். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. ஆனால், ராமநாதபுரம், ராமேசுவரம் பகுதிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படவில்லை. ஆகவே, தீபாவளி பண்டிகை மற்றும் அமாவாசை போன்ற நாள்களில் ராமநாதபுரம் பகுதிக்கு சிறப்பு ரயில்களை இயக்கவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT