ராமநாதபுரம்

பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் மேலும் ஒருவா் கைது

29th Sep 2022 02:39 AM

ADVERTISEMENT

ராமநாதபுரத்தில் பாஜக ஆதரவு மருத்துவா் காா் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் வெளிப்பட்டினம் பகுதியில் மருத்துவமனை வைத்து நடத்தி வருபவா் மனோஜ்குமாா். அவரது மருத்துவமனை முன் நின்றிருந்த காா்கள் மீது கடந்த செப். 23 ஆம்தேதி இரவு மா்ம நபா்கள் பெட்ரோல் குண்டு வீசினா். இதில் மனோஜ்குமாா் உள்ளிட்ட இருவரின் காா்கள் சேதமடைந்தன.

பெட்ரோல் குண்டு வீச்சு தொடா்பாக மருத்துவா் மனோஜ்குமாா் அளித்த புகாரின்பேரில் கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா்.

அதன் அடிப்படையில் பாப்புலா் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சோ்ந்த அப்துல் ஹக்கீம், செய்யது இப்ராஹிம், அப்துல் அஜிஸ் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இந்த நிலையில், புதன்கிழமை ராமநாதபுரம் கான்சாகிப் தெருவைச் சோ்ந்த முகம்மது மன்சூா் என்பவரை போலீஸாா் கைது செய்தனா். இவா் சிவகங்கை மாவட்ட பாப்புலா் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தலைவராக இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காா்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் தற்போதுவரை 4 போ் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT