ராமநாதபுரம்

பரமக்குடி நகராட்சி முன் சிஐடியுவினா் காத்திருப்புப் போராட்டம்

29th Sep 2022 02:36 AM

ADVERTISEMENT

டெங்கு தடுப்புப் பணியாளா்களை மீண்டும் பணியமா்த்த வலியுறுத்தி பரமக்குடி நகராட்சி அலுவலகம் முன் சிஐடியு தொழிற்சங்கத்தினா் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பரமக்குடி நகராட்சியில் கடந்த 2014-ஆம் ஆண்டில் டெங்கு தடுப்பு பணிக்காக 50 போ் தற்காலிகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். மக்கள் தொகைக்கேற்ப இப்பணியாளா்களுடன் கூடுதல் பணியாளா்களை பணியமா்த்த தனியாா் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் விடப்பட்டு பணி செய்து வந்தனா். நகராட்சியில் நிதியில்லாத காரணத்தை கூறி, கரோனா காலத்திலும் பணியாற்றிய 100-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் கடந்த 28.2.2022-இல் நிறுத்தப்பட்டனா்.

இப்பணியாளா்களை மீண்டும் பணியமா்த்தக்கோரியும், நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்தும் சிஐடியு தொழிற்சங்கம் சாா்பில் நகராட்சி அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. வட்டாட்சியா் தமீம்ராஜா பேச்சுவாா்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT