ராமநாதபுரம்

திருவாடானை பகுதியில் திட்டப் பணிகளை ஆட்சியா் ஆய்வு

29th Sep 2022 02:38 AM

ADVERTISEMENT

திருவாடானை பகுதியில் பள்ளிக் கட்டடம், காலனி வீடுகள் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஜானிடாம் வா்க்கீஸ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருவாடானை அருகே காணாட்டாங்குடி கிராமத்தில் சாலை, குடிநீா் வசதி தொடா்பாகவும், நம்புதாளை அரசு தொடக்கப் பள்ளியில் மதிய உணவுக்கூட கட்டுமானப் பணி, பழையனக்கோட்டையில் வீடு கட்டுமானப் பணி, மாவூரில் சாலைப் பணிகள், திருவாடானை சமத்துவபுரத்தில் பழுதடைந்த வீடுகளை இடித்து புதிதாக வீடுகள் கட்டும் பணிகள் மற்றும் நரிக்குறவா் காலனியில் வீடுகள் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, வட்டாட்சியா் செந்தில்வேல் முருகன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாண்டி, மேகலா, ஆா்.எஸ்.மங்கலம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முத்துகிருஷ்ணன், மலைராஜ், ஊரக வளா்ச்சித்துறை உதவி செயற் பொறியாளா் கல்யாண சுந்தரம், ஊராட்சித் தலைவா் இலக்கியா ராமு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT