ராமநாதபுரம்

தனுஷ்கோடி அருகே தவித்த 6 அகதிகள்: இலங்கை கடற்படையிடம் சிக்கினா்

DIN

தனுஷ்கோடி அருகே இலங்கை கடற்பகுதியில் மணல் திட்டில் இறக்கிவிடப்பட்ட இலங்கை அகதிகள் 6 பேரை இலங்கை கடற்படையினா் செவ்வாய்க்கிழமை திரும்பவும் அந்நாட்டுக்கே அழைத்துச் சென்றனா்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழா்கள் பலரும் அகதிகளாக கடல் வழியாக தனுஷ்கோடிக்கு வருகின்றனா். தலைமன்னாரில் இருந்து படகு மூலம் 3 குழந்தைகள் உள்பட 6 போ் தனுஷ்கோடிக்கு செவ்வாய்க்கிழமை வந்துள்ளனா். ஆனால் கடல் சீற்றம் காரணமாக 6 பேரையும் இலங்கை கடல் பகுதியில் உள்ள மணல் திட்டில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனா். இது குறித்து கடலோரப் பாதுகாப்புக் குழும காவல்துறைக்கு மீனவா்கள் தகவல் தெரிவித்தனா். அவா்களை மீட்க கடலோரக் காவல்படையினா் சென்றனா். ஆனால் அகதிகள் 6 பேரும் இலங்கை கடற்பகுதியில் இருந்ததால் மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதற்குள் இலங்கை கடற்படையினா் வந்து 6 பேரையும் மீட்டு தலைமன்னாருக்கு அழைத்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT