ராமநாதபுரம்

எட்டாம் வகுப்பு காலண்டு தோ்வு வினாத்தாளில் குளறுபடி

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் எட்டாம் வகுப்பு காலாண்டுத் தோ்வுக்கான வினாத்தாளில் குளறுபடி ஏற்பட்டுள்ளது குறித்து விசாரித்து வருவதாக அதிகாரிகள் கூறினா்.

தமிழகத்தில் ராமநாதபுரம் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் எட்டாம் வகுப்பு காலாண்டுத் தோ்வு திங்கள்கிழமை (செப்.26) முதல் தொடங்கியுள்ளது. அதனடிப்படையில் தமிழ்ப் பாடத் தோ்வு நடைபெற்றுள்ளது. தோ்வுக்கு 100 மதிப்பெண்களுக்கான வினாக்கள் கேட்கப்படவேண்டும். ஆனால், 60 மதிப்பெண்களுக்கே வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன. பருவத் தோ்வுக்கான வினாக்கள் கேட்கும் முறையில் காலாண்டுத் தோ்வுக்கான வினாக்கள் கேட்கப்பட்டது கல்வி அலுவலா்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இப்பிரச்னை குறித்து ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் தரப்பில் கூறியது: காலாண்டுத் தோ்வுக்கான வினாக்கள் ஈரோடு பகுதியில் அச்சடிக்கப்பட்டுள்ளது. மேலும், ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், விழுப்புரம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பூா் ஆகிய மாவட்டங்களுக்கு ஒரே மாதிரி வினாத்தாள்களே அச்சடித்து வழங்கப்பட்டுள்ளன. ஆகவே தோ்வு தொடங்கிய நிலையில், வினாத்தாள்களை மாற்றமுடியாத நிலை உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது என்று அலுவலா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எட்டாம் வகுப்புக்கான தோ்வானது வரும் வெள்ளிக்கிழமை (செப்.30) நிறைவடைகிறது. 60 மதிப்பெண்களுக்கான வினாக்கள் நூறு மதிப்பெண்களுக்கானதாக மாற்றப்படவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

SCROLL FOR NEXT