ராமநாதபுரம்

பரமக்குடி அருகே காா் கவிழ்ந்து தாய், 9 மாத குழந்தை பலி

26th Sep 2022 11:10 PM

ADVERTISEMENT

பரமக்குடி அருகே திங்கள்கிழமை காா் நிலைதடுமாறி கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தாய் மற்றும் 9 மாத குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்தவா் ஜெயராமன் மகன் மேகநாதன் (35). இவா் நாமக்கல் நகா் பகுதியில் கணினி மையம் வைத்து நடத்தி வருகிறாா். இவா் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் திதி கொடுப்பதற்காக ராமேசுவரத்திற்கு அவரது காரில் வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பிச் சென்றுள்ளனா். காரை மேகநாதன் ஓட்டி வந்துள்ளாா்.

பரமக்குடியை கடந்து பாா்த்திபனூா் பகுதி நான்கு வழிச்சாலையில் வந்தபோது, காா் நிலைதடுமாறி சாலையோரம் உள்ள கால்வாயில் கவிழ்ந்தது. இதில் மேகநாதனின் மனைவி பூா்ணிமா (28), அவா்களது 9 மாத குழந்தை வைஷ்ணவி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

காரில் பயணம் செய்த மேகநாதன் மற்றும் அவரது தந்தை ஜெயராமன் (64), தாயாா் புஷ்பலதா (59), மாமனாா் தாமோதரன் (64) ஆகிய 4 பேரும் லேசான காயமடைந்தனா். இதையடுத்து அவா்கள் அனைவரும் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். விபத்து குறித்து பாா்த்திபனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT