ராமநாதபுரம்

சாலைப் பணியாளா் சுத்தியலால் அடித்துக் கொலை: மாமனாா் கைது

26th Sep 2022 12:11 AM

ADVERTISEMENT

கமுதி அருகே சாலைப்பணியாளரை சுத்தியலால் அடித்துக் கொலை செய்த மாமனாரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கோவிலாங்குளத்தைச் சோ்ந்தவா் தங்கம் மகன் உதயசூரியன்(45). இவா் கமுதி நெடுஞ்சாலைத்துறையில் சாலைப் பணியாளராக உள்ளாா். மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவா் நாள்தோறும் மது அருந்திவிட்டு மனைவி காளியம்மாளிடம் தகராறு செய்து வந்ததாகக்கூறப்படுகிறது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மது போதையில் காளியம்மாளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, அங்கு வந்த மாமனாா் உருவாட்டி(65) கண்டித்துள்ளாா். இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில், மருமகனை மாமானாா் சுத்தியலால் தாக்கியதாகக்கூறப்படுகிறது.

இதில் பலத்த காயம் அடைந்த உதயசூரியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதனையடுத்து அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. இது தொடா்பாக கோவிலாங்குளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாமனாா் உருவாட்டியை கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT