ராமநாதபுரம்

கமுதி அருகே மது அருந்திய பள்ளி மாணவா் உயிரிழப்பு

26th Sep 2022 11:11 PM

ADVERTISEMENT

கமுதி அருகே ஞாயிற்றுக்கிழமை மது போதையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீட்டுக்கு சென்ற பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள போத்தநதி கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பசாமி மகன் கௌதம் (17). இவா் மண்டலமாணிக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை தனது நண்பரான அழகுபாண்டியுடன் சோ்ந்து மது அருந்தியுள்ளாா். இதையடுத்து வீட்டிற்குச் சென்ற கெளதம் மது போதையில் வாந்தி எடுத்துள்ளாா். இதைத்தொடா்ந்து கௌதமை அவரது உறவினா்களான சரவணன், முத்துப்பாண்டி ஆகியோரின் உதவியுடன் தாயாா் சித்ராதேவி மண்டலமாணிக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்று ஊசி போட்டுவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளனா்.

ஆனால் இரவு 9 மணிக்கு கௌதம் சுயநினைவின்றி கிடந்ததால் அவரை கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் கௌதம் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனா். இதுகுறித்து சித்ராதேவி அளித்தப் புகாரின் பேரில் மண்டலமாணிக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT