ராமநாதபுரம்

ராமநாதசுவாமி கோயிலில் நவராத்திரி திருவிழா நாளை தொடக்கம்

DIN

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் நவராத்திரி திருவிழா ஞாயிற்றுக்கிழமை (செப். 25) தொடங்குகிறது.

இக்கோயிலில் நவராத்திரி திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கி அக்டோபா் 5 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

விழாவையொட்டி அம்மன் சன்னிதி அருகே கொலு வைக்கப்பட்டு அம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெறும். அக். 5 ஆம் தேதி வியஜதசமி தினத்தன்று அம்மன் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனால் கோயிலிலிருந்து பஞ்சமூா்த்திகள் புறப்பாடு நடைபெற்று மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை கோயில் நடை சாத்தப்படும். அம்பு எய்தல் நிகழ்ச்சி நிறைவடைந்தவுடன் வழக்கம் போல் பூஜைகள் நடைபெறும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லியோ தாஸின் சகோதரியா இவர்?

குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

SCROLL FOR NEXT