ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் பாஜக ஆதரவாளரான மருத்துவரின் காா்கள் தீ வைத்து எரிப்பு

24th Sep 2022 10:27 PM

ADVERTISEMENT

ராமநாதபுரத்தில் பாஜக ஆதரவாளரான அரசு மருத்துவரின் மருத்துவமனையில் நிறுத்தப்பட்டிருந்த 2 காா்களை மா்மநபா்கள் சனிக்கிழமை அதிகாலையில் தீவைத்து எரித்தனா்.

ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருபவா் மனோஜ்குமாா். இவா் பாஜகவின் ஆதரவாளராக இருந்து வருகிறாா்.

மனோஜ்குமாருக்கு சொந்தமான மருத்துவமனை கேணிக்கரை பகுதியில் உள்ளது. இந்த மருத்துவமனை வளாகத்தில் 2 காா்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

சனிக்கிழமை அதிகாலையில் இங்கு வந்த மா்ம நபா்கள், காா்களுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றனா். பணியாளா்கள் மற்றும் பொதுமக்கள் தீயை அணைத்தனா். இதுகுறித்து மருத்துவா் மனோஜ்குமாா் கேணிக்கரை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

ADVERTISEMENT

அதன்பேரில், அங்கு வந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை ஆய்வு செய்தாா். மேலும் மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமரா காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்தனா். அதில் 2 போ் தீ வைத்து விட்டு தப்பிச் சென்றது பதிவாகி உள்ளது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மா்மநபா்களைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து ராமநாதபுரத்தில் இந்து அமைப்பு நிா்வாகிகள் 6 பேருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT