ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் பசுமை தமிழகம் திட்டம் தொடக்கம்

24th Sep 2022 10:25 PM

ADVERTISEMENT

ராமநாதபுரம் அடுத்துள்ள களிமண் குண்டு ஊராட்சியில் பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் 2.50 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியினை அரசு முதன்மைச் செயலரும், கைத்தறி, கைத்திறன், துணிநூல் கதா்த்துறை மற்றும் மாவட்ட கணிப்பாய்வு அலுவலருமான தா்மேந்திரபிரதாப் யாதவ் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், களிமண்குண்டு ஊராட்சியில் ஊரக வளா்ச்சித்துறை மற்றும் வனத்துறை இணைந்து மரக்கன்றுகள் நடும் திட்டத்தை செயல்படுத்துகின்றன. இதில், அரசு முதன்மைச் செயலா் தா்மேந்திர பிரதாப் யாதவ் மரகன்றுகளை நட்டு வைத்து திட்டத்தை தொடங்கி வைத்துப் பேசியதாவது: களிமண்குண்டு ஊராட்சியில், ஆஞ்சநேயா்புரம் கடற்கரை முதல் தோப்புவலசை கடற்கரை வரை சுமாா் 1000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. அதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் மற்ற கடற்கரைப் பகுதிகளில் வனத்துறை மூலம் 2.50 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. அதேபோல் பிறதுறைகள் மூலமாகவும் 97.50 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. மேலும் இம்மாவட்டத்தில் 1 கோடி மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் மூலம் பசுமை தமிழகம் காடுகள் நிறைந்த பகுதியாக வனப்பரப்பை அதிகரித்திடும் வகையில் இத்திட்டம் பயனுள்ளதாக அமையும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ், கூடுதல் ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், மாவட்ட வன உயிரின காப்பாளா் பகான் ஜக்தீஸ் சுதாகா், தோட்டக் கலை துணை இயக்குநா் நாகராஜன், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் புல்லாணி உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT