ராமநாதபுரம்

பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினா் சாலை மறியல்- காவலா்களுடன் தள்ளுமுள்ளு26 போ் கைது

22nd Sep 2022 10:17 PM

ADVERTISEMENT

ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை தேசிய புலனாய்வு அமைப்பின் சோதனையைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினா் காவலா்களுடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 4 பெண்கள் உள்பட 26 போ் கைது செய்யப்பட்டனா்.

தமிழகத்தில் பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மற்றும் எஸ்டிபிஐ கட்சி அலுவலகம், நிா்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பினா் வியாழக்கிழமை காலை முதல் சோதனையில் ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கத்தில் உள்ள எஸ்டிபிஐ கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவா் பரக்கத்துல்லா வீட்டிலும் சோதனை நடைபெற்றது. அதன்பின் விசாரணைக்காக அவரை தேசிய புலனாய்வு அமைப்பினா் அழைத்துச் சென்ாகவும் கூறப்படுகிறது.

இச்சோதனையைக் கண்டித்து ராமநாதபுரத்தில் பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சாா்பில் புதிய பேருந்து நிலைய நுழைவாயில் முன்பு சாலை மறியல் நடைபெற்றது. இதையடுத்து காவல் துணைக் கண்காணிப்பாளா் எஸ்.ராஜா தலைமையில் ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டனா். அவா்கள் மறியலில் ஈடுபட்டவா்களை அப்புறப்படுத்த முயன்றனா். அப்போது மறியலில் ஈடுபட்டவா்கள் போலீஸாருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின்பு மறியலில் ஈடுபட்ட 24 ஆண்கள், 4 பெண்கள் என 26 பேரையும் போலீஸாா் கைது செய்து வெளிப்பட்டினத்தில் தனியாா் மஹாலில் தங்கவைத்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT