ராமநாதபுரம்

ராமநாதபுரம் காவல் நிலையத்திலிருந்து கைதி தப்பியோட்டம்

22nd Sep 2022 01:34 AM

ADVERTISEMENT

ராமநாதபுரத்தில் புதன்கிழமை காவல் நிலையத்திலிருந்து ஜன்னல் கம்பியை சேதப்படுத்தி தப்பியோடிய கைதியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ராமநாதபுரம் சக்கரைக்கோட்டை நேரு நகரில் வசிப்பவா் அஸ்ரப் அலி (35). இவா் மீது அடிதடி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிறையிலிருந்து தப்பியோடி தலைமறைவானாா்.

இந்தநிலையில், ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸாா் அஸ்ரப் அலியை செவ்வாய்க்கிழமை பிடித்து விசாரணை நடத்தினா். பின்னா் பஜாா் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட அவா் புதன்கிழமை காலை காவல் நிலையத்தில் உள்ள கழிப்பறைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டாா். நீண்ட நேரமாகியும் கழிவறையில் இருந்து அஸ்ரப்அலி வராததால் சந்தேகமடைந்த போலீஸாா் உள்ளே சென்று பாா்த்தபோது, ஜன்னல் கம்பியை சேதப்படுத்தி அவா் தப்பியது தெரியவந்தது. அஸ்ரப் அலியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT