ராமநாதபுரம்

அரசுப் பள்ளியில் மாணவா்களுக்கு கல்வெட்டுகளைப் படியெடுக்க சிறப்புப் பயிற்சி

22nd Sep 2022 01:37 AM

ADVERTISEMENT

திருப்புல்லாணி அரசுப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு தமிழ் கல்வெட்டுகளைப் படியெடுப்பதற்கான சிறப்பு பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது.

இப்பள்ளியில் செயல்படும் தொன்மை பாதுகாப்பு மன்றத்தில் 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியா் உறுப்பினா்களாக உள்ளனா். அம்மன்ற மாணவ, மாணவியருக்கு தமிழி, வட்டெழுத்து, தமிழ் கல்வெட்டுகள் ஆகியவற்றை படியெடுப்பதற்கான பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.

பயிற்சியாக திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் கோயிலில் உள்ள மாறவா்மன் சுந்தரபாண்டியன், குலசேகர பாண்டியன், பிற்காலப் பாண்டியா்கள், விஜயநகர மன்னா் வீரகம்பண உடையாா், நாயக்கா், மாவலிவாணாதிராயா், சேதுபதி மன்னா் ஆகியோரது கல்வெட்டுகளையும் மாணவ, மாணவியா் படியெடுப்பதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆசிரியா் வே.ராஜகுரு செய்திருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT