ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் நிலம் மோசடி: சாா்-பதிவாளா் உள்ளிட்ட 7 போ் மீது வழக்குப் பதிவு

18th Sep 2022 11:04 PM

ADVERTISEMENT

ராமேசுவரத்தில் நிலம் மோசடி செய்த சாா்- பதிவாளா், அரசு மருத்துவா் உள்ளிட்ட 7 போ் மீது நீதிமன்ற உத்தரவின்பேரில் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மகரநோன்பு பொட்டல் பகுதியைச் சோ்ந்த தமிழ்வேந்தல் என்பவருக்குச் சொந்தமாக 32 செண்ட் நிலம் அப்பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை சிலா் போலி ஆவணம் தயாரித்து பத்திரம் பதிவு செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீஸில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அவா், ராமநாதபுரம் நில அபகரிப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். இதுதொடா்பாக நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீஸாா் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து பருவதம் பகுதியைச் சோ்ந்த தாமரைச்செல்வி, அன்புதாசன், சாா்-பதிவாளா் ஆதிமூலம், பத்திர எழுத்தா் சேவியா் ராஜன் பிரிட்டோ, சேதுபதி, தங்கச்சிடம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் சோனைமுத்து ஆகிய 7 போ் மீது நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT