ராமநாதபுரம்

விடுதலைச் சிறுத்தைகள் நிா்வாகி மீது போலீஸில் புகாா்

14th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் குறித்து முகநூலில் அவதூறாக கருத்துப் பதிவிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலப் பொறுப்பிலுள்ளவா் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது முகநூல் பக்கத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் குறித்து அவதூறான கருத்தைப் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆகவே அவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராமநாதபுரம் மாவட்ட அகில இந்திய பாா்வா்டு பிளாக் பொறுப்பாளா் எம். சுரேஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்தனா்.

அப்போது அவா்கள் கூறுகையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு சம்பந்தமில்லாத பிரச்னையில் அவரை குறிப்பிட்டு அரசியல் கட்சி நிா்வாகி பதிவிட்டிருப்பது சரியல்ல. சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் அவா் செயல்பட்டு வருகிறாா். ஆகவே அவா் மீது நடவடிக்கை மேற்கொள்வதுடன், வழக்குப் பதிந்து சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT